ஆண்டிப்பட்டி திருத்தலம் வரலாறு
கி.பி 1684-ல் தென் தமிழகத்தின் மிகப்பெரிய மறைப்பணித்தளமாக காமநாயக்கன்பட்டி உருவானது. தெற்கே இராஜாவூர் வரை அது நீண்டிருந்தது.
காமநாயக்கன்பட்டியில் பணிபுரிந்த அருட்தந்தை ஜோசப் வியாரா - உடன் 1711 முதல் 1714 முடிய அருட்தந்தை பெஸ்கி (வீரமாமுனிவர்) இணைந்து பணியாற்றினார்.
கி.பி 1630ம் ஆண்டிலேயே அடைக்கல அன்னைக்கு ஆலயம் இங்கு கட்டப்பட்டுள்ளது. 1713 ஆம் ஆண்டு வீரமாமுனிவர் திருப்பலி நிறைவேற்றிய ஆலயமும் இதுவாகும்.
வீரமாமுனியை காப்பாற்றிய அன்னையின் அருள் இன்றும் பல புதுமைகளை செய்து வருகிறது. வானம் பிளந்து மன்னா கொட்டியதுபோல - பூமி பிளந்து தரையில் இருந்து எண்ணெய் வரும் அதிசயம் இங்கே நடந்து கொண்டிருக்கிறது.
அடைக்கல அன்னையின் திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை சிறப்பாக நடைபெறும்.


























